எண்ணம் போல தான் வாழ்க்கை !
இதற்காக உங்களுக்கு கதை ஒன்று சொல்லுகிறேன்.ஒரு பணக்காரன் நிம்மதியை தொலைத்துவிட்டு ஒரு சாமியாரை பார்க்க சென்றான்.அந்த சாமியார் என்ன பிரச்சனை என்று கேட்டார்.அதற்கு அந்த பணக்காரர் எனக்கு நிம்மதி இல்லை என்று சொன்னார்.எதனால நிம்மதி இழந்தாய் கூறு என்றார்.அதற்கு பணக்காரர் நான் கஷ்டப்பட்டு தங்கத்தை சேர்த்து வைத்தேன் அது திருடு போய்விட்டது என்றார்.தினமும் அதை காலை பார்த்து தான் செல்வேன் என்றான்.சாமிக்கு யோசனை ஒரு செங்கல் எடுத்து வந்து தங்கம் முலாம் பூசி அதை அந்த பணக்காராடம் கொடுத்தார்,சாமியார் நீ போய்ட்டு அடுத்த வாரம் வா என்று சொல்லி அனுப்பினார்.அடுத்த வாரம் அந்த பணக்காரர் முகத்தில் சந்தோசம் களைகட்டியது.சாமியாரை பார்த்து பணக்காரர் கேட்டார் எப்படி சாமி இது சாத்தியம் என்றார்.அதற்கு சாமியார் சொன்னார் நீ எண்ணத்தில் அதன் மதிப்பை நினைத்து வாழ்ந்து வந்தாய் இப்பொழுது அந்த பொருள் உள்ளது போல உன் மனதை நம்ப வைத்துவிட்டேன். நம் எண்ணமே காரணம்.

No comments